திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டம் ஷீரடி சாய் பாபா ஆலயத்தில் 7ஆம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கரோனோ தொற்று காரணமாக ஊர்வலம் அனுமதி இல்லாததால் கோயில் வளாகத்தின் உள்ளேயே, பக்தர்கள் பால் குடம் சுமந்து சாய் பாபாவிற்கு அவரவர் கையால் அபிஷேகம் செய்தனர்.
கடந்த ஆண்டு 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து பால் குடம் எடுத்து வந்த நிலையில், தற்போது கரோனோ தொற்று காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த அளவில் பக்தர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராப்பத்து 8ஆம் நாள்: ஸ்ரீரங்கத்தில் வேடுபறி வைபவம் நிகழ்த்திய ரங்கநாதர்!