மதுரை சோலையழகுபுரம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த அரிச்சந்திரன் என்பவர், ஷேர் ஆட்டோ ஓட்டுநராக இருந்தவந்தார். சில தினங்களுக்கு முன், ஆட்டோவில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதாக கூறி காவல்துறையினர் அபராதம் விதித்தனர். ஆனால், அதை கட்ட முடியாததாலும் காவல்துறையின் நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளான அரிசந்திரன், மின் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அரிச்சந்திரன் உயிரிழப்புக்கு காவல்துறையினரின் நெருக்கடிதான் காரணம் எனக்கூறி மதுரை காவல்துறையினரை கண்டித்தும், உயிரிழந்த அரிச்சந்திரன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி திருவாரூர் பழையப் பேருந்து நிலையம் எதிரே சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்க:
ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை: ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரிக்கை