திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பர் சந்திரஹாசன் NARC என்கிற பெயரில் ஹோட்டல் மேலாண் இயக்குனராக உள்ளார். கடந்த 8ஆம் தேதி அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அவருக்கு சொந்தமான டுட்டோரியல் கல்வி நிறுவனத்திற்கும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சீல் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு திருவாரூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் கல்வி நிலையத்தில் சோதனை நடைபெற்றுள்ளது. இதில் அவரது கம்ப்யூட்டரில் முக்கிய ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட இரண்டு ஹார்ட்டிஸ்க் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற சோதனையின் போது சந்திரஹாசன் வெளியூர் சென்றிருந்த நிலையில் நேற்று சொந்த ஊர் திரும்பிய போது இந்த சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் மீதான ரெய்டு: கணக்கில் வராத ரூ.15 லட்சம் பறிமுதல்!