திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா காரணமாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் யாரும் அவற்றைப் பதுக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பது கண்டிக்கத்தக்கச் செயல். எனவே அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அவர், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த 905 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 2500 ரூபாய் மதிப்பில் அத்தியவசியப் பொருள்கள் வழங்கப்படுகிறது. திருவாரூரில் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 60 பேருக்கும் கரோனா பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்கள் ஒத்துழைப்புதான் அரசின் எதிர்பார்ப்பு: அமைச்சர் கடம்பூர் ராஜூ