ETV Bharat / state

ரூ.50 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது! - Rs 50 crore fraud in Tiruvarur

திருவாரூர்: ரூ.50 கோடி மோசடி செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் நீதிமோகனை திருவாரூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

ரூ.50 கோடி மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர்

author img

By

Published : May 17, 2020, 4:03 PM IST

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நீதி மோகன் என்பவர், கடந்த 2008-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் புலம்பெயர்ந்து 22-க்கும் மேற்பட்ட பங்குதாரர்களுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2 ஆண்டு காலமாக நீதி மோகன், 50 கோடிக்கும் மேலாகப் பணம் பெற்றுக்கொண்டு, நிலங்களை வழங்காமல் இருப்பதாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் தொடர் புகார்கள் கொடுத்து வந்தனர். அதனடிப்படையில், நீதி மோகனை திருவாரூர் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் நீதி மோகனிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பான தொடர் விசாரணையில், நீதி மோகன் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் பணியாற்றிய கலைச்செல்வன், ரவிச்சந்திரன், சிவசுப்பிரமணியன், நாயகம், முருகன், கபிலன், பாண்டியன் ஆகிய 7 பேரை திருவாரூர் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் இந்த 7 பேரிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி: தப்பிய ரூ.80 லட்சம் பணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.