ETV Bharat / state

விவசாயத்திற்கு ஒதுக்கிய பட்ஜெட் ஏமாற்றம்: டெல்டா விவசாயிகளின் கருத்து! - பட்ஜெட் டெல்டா விவசாயிகள் கருத்து

திருவாரூர்: மத்திய அரசு அறிவித்துள்ள நாட்டின் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக டெல்டா விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

2020 budget is disppointing says thiruvarur delta farmers
விவசாயி
author img

By

Published : Feb 2, 2020, 1:22 PM IST

2020-21ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் விவசாயம், தனிநபர் வருமான வரி, பொதுதுறை நிறுவனங்கள் சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்ததாவது, “பாஜக அரசு ஆட்சியமைத்ததில் இருந்து ஒவ்வொரு நிதி ஆண்டிலும் விவசாயிகளின் வருவானம் இரட்டிப்பாக்கபடும் என அறிவித்து வருகிறது.

அதே இந்தாண்டும் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கபடும் என கூறியிருந்தது. இது வெறும் அறிவிப்பாக மட்டும் இருக்கிறது அதற்கான எந்த முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

விவசாயத்திற்கு ஒதுக்கிய பட்ஜெட் ஏமாற்றம்; விவசாயிகளின் கருத்து!

விவசாயத்திற்கென ரூ.12 ஆயிரத்து 955 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களை விவசாயத்தில் ஈடுபடுத்தும் நோக்கில் தானிய லட்சுமி திட்டம், வேளாண் விளைப்பொருட்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதற்காக குளிர்சாதன ரயில் சேவை, ஏற்றுமதி செய்வதற்கு விமான சேவை போன்ற அறிவிப்புகள் வரவேற்க்க கூடியதாக இருந்தாலும், நெல்லுக்கான உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற எம்.எஸ் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை ஏற்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளை ஏற்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நதி நீர் இணைப்பு, நதி நீர்களை மாநிலங்களுக்கிடையே பிரித்து கொள்வது மாநிலங்களுக்கிடையேயான சர்ச்சையை போக்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை.

பண்ணைத் திட்டம் என்ற பெயரில் ரூ.15 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கார்பரேட் நிறுவனங்கள் அடங்குகிறதா என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு என அறிவித்துவிட்டு பெருநிறுவத்திற்கு அந்த நிதிபோய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மொத்தத்தில் தற்போது அறிவித்திருக்ககூடிய நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க: பட்ஜெட்டின் தாக்கத்தை உணர திங்கள் வரை காத்திருங்கள்: நிர்மலா சீதாராமன்

Intro:

Body:2020-21ம் ஆண்டிற்காக மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட் விவசாயிகளும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக டெல்டா விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

2020-21ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் விவசாயம், தனிநபர் வருமான வரி, பொதுதுறை நிறுவனங்கள் சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

வெளியாகியுள்ள பட்ஜெட் குறித்து டெல்டா மாவட்ட விவசாயகள் தெரிவித்ததாவது,

பாஜக அரசு ஆட்சியமைத்ததில் இருந்து ஒவ்வொரு நிதி ஆண்டிலும் விவசாயிகளின் வருவானம் இரட்டிப்பாக்கபடும் என அறிவித்து வருகிறது. அதே இந்த ஆண்டும் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கபடும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே அதற்கான எந்த முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

விவசாயத்திற்கென 12ஆயிரத்து 955கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களை விவசாயத்தில் ஈடுபடுத்தும் நோக்கில் தானிய லட்சுமி திட்டம், மற்றும் வேளாண் விளைபொருட்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதற்காக குளிர்சாதன இரயில் சேவை, ஏற்றுமதி செய்வதற்கு விமான சேவை போன்ற அறிவிப்புகள் வரவேற்க்க கூடியதாக இருந்தாலும், நெல்லுக்கான உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற எம்.எஸ் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை ஏற்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளை ஏற்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நதி நீர் இணைப்பு, நதி நீர்களை மாநிலங்களுக்கிடையே பிரித்து கொள்வது மாநிலத்திற்கிடையேயான சர்ச்சையை போக்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. பண்ணை திட்டம் என்ற பெயரில் ரூ15இலட்சம் கோடி அறிவித்திருப்பது இதில் கார்பரேட் நிறுவனங்கள் அடங்குகிறதா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். விவசாயிகளுக்கு என அறிவித்துவிட்டு கார்பரேட் நிறுவத்திற்கு அந்த நிதிபோய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

மொத்தத்தில் தற்போது அறிவித்திருக்ககூடிய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

பேட்டி.
வரத ராஜன்
காவிரி விவசாய சங்கம் - துணை தலைவர்
பழனிவேல் - விவசாயி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.