ETV Bharat / state

மரணத்திலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறப்பை கேட்டு உயிரிழந்த மனைவி! - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை: போளூர் அருகே மாரடைப்பால் கணவர் உயிரிழந்த தகவலை கேட்ட மனைவியும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

Wife dies after hearing of husband's death
கணவர் மனைவி இறப்பு
author img

By

Published : Aug 24, 2020, 1:22 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு மசூதி தெருவைச் சேர்ந்தவர் அப்துல்சமது. இவரது மனைவி ஆசியா பேகம். இவர்களுக்கு திருமணமாகி 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், அப்துல்சமத் தனக்கு மாரடைப்பு ஏற்படுவதாக அவரது மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை மனைவி, மகன்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைக் கேட்ட அவரது மனைவிக்கும் மாரடைப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கணவர் இறந்த அதிர்ச்சி தாங்காமல் மனைவியும் உடனே இறந்த சம்பவம் உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதி, தற்போது மறைவிலும் இணைபிரியாமல் உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.