ETV Bharat / state

பொங்கல் பண்டிகை : களைகட்டிய தேப்பனந்தல் மாட்டு சந்தை... ரூ.3 கோடிக்கு வர்த்தகம் - விவசாயிகள் உற்சாகம்! - pongal festival

Pongal Mattu Santhai: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை தேப்பனந்தலில் நடைபெற்ற மாட்டு சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு களைகட்டிய மாட்டு சந்தை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 5:31 PM IST

பொங்கல் பண்டிகை முன்னிட்டு களைகட்டிய மாட்டு சந்தை

திருவண்ணாமலை: ஆரணி அருகே உள்ள தேப்பனந்தல் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக வாரந்தோறும் சனிக்கிழமை மாட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். குறிப்பாக பண்டிகை நாட்களில் இந்த மாட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. அதை போல், இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேப்பனந்தல் மாட்டு சந்தை களைகட்டியது.

இந்த மாட்டு சந்தையில் ஜெர்சி மற்றும் நாட்டு மாடு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வந்து குவிந்தன. வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாடுகள் இறக்குமதி செய்யபட்டும் மாட்டு சந்தை அமோகமாக நடைபெற்றது.

மேலும், தேப்பனந்தல் மாட்டு சந்தையில் தற்போது வரையில் கைகளில் துண்டு போட்டு விலை பேசும் நிகழ்வு விவசாயிகள் - வியாபாரிகளிடையே நடைபெறுவதால் இந்த மாட்டுத் சந்தை தனிக் கவனம் பெற்று உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மாட்டு சந்தையில் விடியற்காலை முதலே விவசாயிகள் ஆர்வத்துடன் மாடுகள் வாங்கவும் விற்பனை செய்யவும் குவிந்தனர்.

இந்த மாட்டு சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் மாடு விற்பனை நடைபெற்றதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். மாட்டு சந்தை குறித்து விவசாயி காளிதாஸ் கூறுகையில், "வார வாரம் இந்த மாட்டு சந்தைக்கு வருவது வழக்கம். அதைபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்த்தோம்.

ஆனால் 3 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. மற்ற நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மாடு விற்பனையாகும், ஆனால் தற்போது 30 ஆயிரம் 40 ஆயிரம் வரையிலும் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த மாட்டு சந்தையில் சுமார் 2 ஆயிரம் மாடுகளுக்கு மேல் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அழைத்து வந்திருந்தனர். ஆந்திரா, வேலூர் போன்ற இடங்களிலும் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்" என்றார்.

இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் வடமாநில பக்தர்கள் சென்ற வேன் விபத்து - 2 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.