இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதனால், பொதுமக்களுக்கு இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் பிரமாண்ட ஓவியங்கள் வரையப்படுகின்றன.
அந்த வகையில், பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை நகரின் காந்தி சிலை முன்பு தன்னார்வலர்கள் மாந்தோப்பு ராஜா, விக்ரமராஜா ஆகியோர் இணைந்து உயிர்க்கொல்லி நோயான கரோனா நோய் குறித்து மாதிரி புகைப்படத்தை கலர் பெயின்ட்டால் ஓஒவியம் வரைந்தனர்.
தனித்திரு, விழித்திரு, வீட்டிலேயே இரு என்ற வாசகத்தை முன்னிலைப்படுத்தி வரையப்பட்ட இந்த ஒவியத்தை அப்பகுதி வழியாக அத்தியாவசிய பொருள்களை வாங்க செல்லும் பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை, சுகாதரக் துறை, நகராட்சி நிர்வாகத்தின் புகைப்படங்கள் அந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ளன. பிரமாண்டமாக வரையப்பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்த ஓவியம் ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவை விரட்டியடிக்கும் காவல் துறை - ஓவியம் சொல்லும் விழிப்புணர்வு