திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
- காலிப்பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் வேண்டும்,
- ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தைக் கலைக்க வேண்டும்,
- ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும்,
- வகுப்புவாத சக்திகளை முறியடித்து மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும்,
- விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்
உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பரிதிமாற்கலைஞர், மணி, மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் குமார், மாநில துணைத் தலைவர் பார்த்திபன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்