திருவண்ணாமலை: ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி அருகே உள்ள கொரலாம்பேட்டா பகுதியை சேர்ந்த வெங்கட ரெட்டி, சேகர் ரெட்டி, மோனிகா மற்றும் மதுமிதா ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்ரா பெளர்ணமி கிரிவலம் செல்ல கார் மூலம் திருவண்ணாமலை வந்திருந்தனர்.
கிரிவலத்தை முடித்துவிட்டு நேற்று(மே 5) இரவு வேலூர் வழியாக ஆந்திரா செல்ல திட்டமிட்டு காரில் புறப்பட்டுச் சென்றனர். காரை சேகர் ரெட்டி ஓட்டிச் சென்றார். கார், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த வேன் மீது மோதியது.
இந்த விபத்தில், வெங்கட ரெட்டி(61), சேகர் ரெட்டி(55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மோனிகா மற்றும் மதுமிதா ஆகியோர் ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேனில் பயணம் செய்த 22 பேரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு அவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Madurai Festival Death: மதுரை கள்ளழகர் திருவிழாவில் 5 பேர் உயிரிழப்பு!