திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அருள்பாலிக்கும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் ஆண்டுதோறும் செய்யாறு, தென்பெண்ணை, கௌதம நதி ஆகிய மூன்று ஆறுகளில் தீர்த்தவாரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அதன்படி தை மாதம் ஐந்தாம் நாளன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரியில் அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தீர்த்தவாரிக்காக திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் அண்ணாமலையாருக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு மண்டகப்படி செய்து வழிபடுவது காலம் காலமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தற்போதைய கரோனா கட்டுப்பாடு காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நாளை(ஜன.18) நடைபெற இருந்த தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார்.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் நாளை நடைபெறுவதாக இருந்த தீர்த்தவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆறு தீர்த்தவாரிக்கு நாளை அண்ணாமலையார் புறப்பாடு நடைபெறாது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!