திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 636ஆக இருந்தது. இன்று புதிதாக 36 பேருக்கு நோய் தொற்று உறுதியானதால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 672ஆக உயர்ந்துள்ளது.
நேற்று வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 413ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாகவும் இருந்தது.
மூன்று மாத குழந்தை, 10 பெண்கள், சென்னையிலிருந்து வந்த 10 பேர், விழுப்புரம், திருக்கோயிலூர், காஞ்சிபுரத்திலிருந்து வந்த தலா ஒருவர், மும்பையிலிருந்து வந்த நான்கு பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த ஒன்பது பேர் உள்ளிட்ட 36 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தாலும், மறுபுறம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 413 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இதையும் படிங்க: கரோனாவில் இருந்து குணமடைந்த பெண்ணை பத்திரமாக வீட்டில் சேர்த்த ஓட்டுநர்...! முதலமைச்சர் பாராட்டு