ETV Bharat / state

திருவண்ணாமலையில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கீழ்ப்பட்டு ஊராட்சியில் பிரதமர் வீடு(PMAY) திட்டத்தில் வீடு கட்டிய நபரிடம் ரூபாய் 30,000 லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர், அவரது கணவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

in Tiruvannamalai Vigilance and Anti Corruption police arrested Panchayat president and her husband for taking Rs 30 thousand bribe
திருவண்ணாமலையில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர், அவர் கணவர் கைது!
author img

By

Published : May 5, 2023, 11:23 AM IST

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கீழ்ப்பட்டு கிராமம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் மகன் எம்ஜிஆர். இவர் நெசவு தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள். மகன்கள் இருவரும் வடமாதிமங்கலம் அரசு பள்ளியில் படிக்கும் படிக்கிறார்கள். நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர் எம்ஜிஆர், அவரது மனைவி பெயர் சரஸ்வதி இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து 2021ஆம் சொந்த கிராமத்தில் காலி மனை வாங்கி அதில் வீடு கட்ட பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளியாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டின் கட்டுமானப் பணிகளை முடித்த எம்ஜிஆர், வீட்டில் குடி புகுந்துள்ளார். இதனையடுத்து எம்ஜிஆர் தன்னுடைய வீட்டிற்கு வரி செலுத்த ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா மணி, மற்றும் அவரது கணவர் மணியை அணுகி உள்ளார்.

அப்போது, அவர்கள் "ஏற்கனவே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளியாய் தேர்வு செய்து வீடு கட்டியதற்கு எனக்கு எந்த பணமும் இதுவரை கொடுக்கவில்லை. மேலும் அதற்கு வீட்டு வரி ரசீது ஒரு கேடா?" என கேட்டு உள்ளனர். மேலும் ஊராட்சிமன்ற தலைவி வேண்டா மணி மற்றும் அவரது கணவர் மணி இருவரும் ரூபாய் 30,000 கொடுத்தால் மட்டுமே எங்களால் வீட்டு வரி ரசீது கொடுக்க முடியும் என்று மிகவும் கறாராக சொல்லி விட்டனர்.

இதனால் மனமுடைந்த எம்ஜிஆர், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி வேல்முருகனிடம் இதுகுறித்து புகார் மனு அளித்தார். அதனை தொடர்ந்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ஆலோசனைப்படி, நேற்று எம்ஜிஆர் பணத்தை வயலில் வேலை செய்து கொண்டிருந்த தலைவர் வேண்டா மணி, அவருடன் இருந்த கணவர் மணியிடம் பணத்தை கொடுத்துள்ளார்.

எம்ஜிஆர் பணம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி வேல்முருகன், இன்ஸ்பெக்டர் மைதிலி, சப் இன்பெக்டர்கள் கோபிநாத், செல்வராஜ், கமல், முருகன் மற்றும் சக காவலர்கள் லஞ்சம் வாங்கிய கீழ்ப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது கணவர் மணி இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரிடமும் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே போளூர் ஒன்றியத்தில் எடப்பிறை ஊராட்சி மன்ற தலைவி ஜீவா சென்ற மாதம் தான் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் தற்போது கணவன் மனைவி கைது செய்யப்பட்டது மாவட்டத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Tirunelveli Nurse murder: நடுரோட்டில் நர்ஸ் எரித்துக்கொலை; கணவர் வெறிச்செயல்.. நெல்லையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.