ETV Bharat / state

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை: அரசுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்! - thiruvannamalai district news

திருவண்ணாமலை: தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டங்களைத் தடுத்து நிறுத்த அதிமுக தவறிவிட்டதாகக் கூறி திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

tiruvannamalai dmk protest against admk government for thenpennai river dam
author img

By

Published : Nov 21, 2019, 5:14 PM IST

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், கர்நாடக அரசு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டிவரும் அணைதிட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி அடைந்த அதிமுக அரசைக் கண்டித்து அண்ணா சிலை முன்பு இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலு தலைமை தாங்கினார். இதில், தென்னைபெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையாக வாதாடவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், இந்த மிகப்பெரிய அணை கட்டப்பட்டால் கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், விழுப்புரம் மற்றும திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். விவசாய நிலங்களுக்கு பாசன நீர் கிடைக்காது.

திருவண்ணாமலையில் திமுக கண்டன ஆர்பாட்டம்

எனவே, தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது குப்பை லாரி மோதி காவலர் உயிரிழப்பு!

Intro:திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக உரிமையை பாதிக்கும் தென்பெண்ணையாற்றில் திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்ட அதிமுக எடப்பாடி அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுகவின் எம்எல்ஏ வும், திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான எ.வ. வேலு தலைமை தாங்கினார்.Body:திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக உரிமையை பாதிக்கும் தென்பெண்ணையாற்றில் திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்ட அதிமுக எடப்பாடி அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுகவின் எம்எல்ஏ வும், திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான எ.வ. வேலு தலைமை தாங்கினார்.

கர்நாடக அரசு தென்பெண்ணையாற்றில் 150 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய அணையை கட்டி வருகிறது. உச்சநீதிமன்றமும் தென்பெண்ணை ஆற்றில் இந்த அணையை கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக எடப்பாடி அரசு இந்த வழக்கில் முறையாக வாதாடவில்லை, முறையாக வாதங்களை முன் வைக்கவில்லை, சரியான முறையில் வழக்கை கையாளவில்லை எனக்கூறி திமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் இந்த மிகப்பெரிய அணை கட்டப்பட்டால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்படும். மேலும் இந்த அணை கட்டப்படுவதால் விவசாயிகளுக்கான பாசன நீர் கிடைக்காது, குடிநீருக்கும் பொதுமக்கள் திண்டாட வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே தமிழக அரசானது இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என கோரி திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திமுக கட்சி தொண்டர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Conclusion:திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக உரிமையை பாதிக்கும் தென்பெண்ணையாற்றில் திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்ட அதிமுக எடப்பாடி அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுகவின் எம்எல்ஏ வும், திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான எ.வ. வேலு தலைமை தாங்கினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.