ETV Bharat / state

கண் பார்வையற்ற மாணவனுக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியர்! - Govt Laptop

திருவண்ணாமலை: வந்தவாசியைச் சேர்ந்த கண்பார்வையற்ற விக்னேஷ் என்ற மாணவன் மனு அளித்த ஒரே நாளில் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மடிக்கணினி வழங்கினார்.

collector kandasamy
author img

By

Published : Aug 2, 2019, 9:13 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சட்டாங்குளம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் வந்தவாசியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். விக்னேஷின் பெற்றோர் விவசாயக் கூலிகள்.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் விக்னேஷ் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், 'எனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. எனவே என்னுடைய படிப்பிற்கு பெற்றோரால் அதிகம் செலவிட முடியாது. என்னுடைய படிப்பிற்கு மடிக்கணினி தேவைப்படுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாணவர் விக்னேஷை அழைத்து மறுநாளே அவருக்கு மடிக்கணினி அளித்தார். இது பற்றி விக்னேஷ் கூறுகையில், "நான் மடிக்கணினி மூலம் பார்வையற்றோருக்கு பயன்படக்கூடிய பல காணொலிகளை பதிவிறக்கம் செய்துள்ளேன்; அவற்றை படிக்க முடியும்.
என்னுடைய கனவு ஐஏஎஸ் படித்து ஆட்சியர் ஆவதுதான். இந்த மடிக்கணினி பெற்றதன் மூலம் ஐஏஎஸ் பயின்று ஆட்சியர் ஆகும் கனவு நனவாகும் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.

திருவண்ணாமலை
கண் பார்வையற்றவருக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியர்

Intro:கண் பார்வையற்ற கல்லூரி மாணவர் விக்னேஷ்சுக்கு மனு அளித்த ஒரே நாளில் மடிக்கணினி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்.Body:திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கண்பார்வையற்ற விக்னேஷ் என்பவருக்கு மனு அளித்த ஒரே நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கோரிக்கையை ஏற்று மடிக்கணினி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சட்டாங்குளும் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்.

இவர் வந்தவாசியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

தனது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது, எனது பெற்றோர் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வருகின்றனர்.

எனவே என்னுடைய படிப்பிற்கு அவர்களால் அதிகம் செலவிட முடியாது. என்னுடைய படிப்பிற்கு மடிக்கணினி தேவைப்படுகிறது என்பதை திங்கள் தின குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தார்.

இதனைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி மாணவர் விக்னேஷ் அவர்களை அழைத்து மறுநாளே அவருக்கு மடிக்கணினி அளித்தார்.

இதுபற்றி கூறிய விக்னேஷ் தான் மடிக்கணினி மூலம் பார்வையற்றோருக்கு பயன்படக்கூடிய பல காணொளிகளை பதிவிறக்கம் செய்து அவற்றை படிக்க முடியும்.

என்னுடைய கனவு ஐஏஎஸ் கலெக்டர் ஆவது. இந்த மடிக்கணினி பெற்றதன் மூலம் நான் ஐஏஎஸ் கலெக்டர் ஆகும் கனவு நினைவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Conclusion:திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கண்பார்வையற்ற விக்னேஷ் என்பவருக்கு மனு அளித்த ஒரே நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கோரிக்கையை ஏற்று மடிக்கணினி வழங்கினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.