தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேவையான அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரி செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்கட்டமாக சரிபார்க்கும் பணி இன்றுடன் (பிப். 2) நிறைவடைந்தது. இதையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு முதல்கட்ட சரிபார்க்கும் பணி நடைபெற்று வந்தது. இப்பணி இன்றுடன் நிறைவடைந்தது. இதில் பேலட் யூனிட் 5,035 கன்ட்ரோல் யூனிட் 3,851 விவிபேட் 4,152 என மொத்தம் 13,038 இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்றது. இதில் 230 இயந்திரங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க... வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணியைப் பார்வையிட்ட கே.என். நேரு