ETV Bharat / state

கந்தசஷ்டி விழா - விண்ணைப் பிளந்த பக்தர்களின் 'அரோகரா' முழக்கம் - திருவண்ணாமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி

திருவண்ணாமலை: பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற மஹா கந்தசஷ்டி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

devasena_marriage
author img

By

Published : Nov 4, 2019, 10:14 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மஹா கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது. மஹா கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி நவம்பர் 6ஆம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

ஏழாம் நாளான நேற்று பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வளாகத்தில் தேவேந்திரனை காத்த முருகப்பெருமானுக்கு தேவேந்திரனின் மகளான தேவசேனாவுடன் திருமணம் நடைபெறும் சுபநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருமணத்தை கண்டு களித்து முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று விண்ணைப் பிளக்க பக்தி பரவசத்துடன் கூறி அருள் பெற்றனர்.

தேவசேனா திருமணத்திற்கு வந்த பெண்கள் அனைவருக்கும் திருமாங்கல்யமும், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

பாலசுப்பிரமணியசுவாமி கோயிலின் மஹா கந்தசஷ்டி திருவிழா!

மேலும் படிக்க: கோயில் நிலங்களை ஏழைகளுக்கு வழங்க பரிசீலனை - உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்!

Intro:தேவேந்திரனை காத்த முருகப்பெருமானுக்கு தேவசேனாவுடன் திருமணம், அரோகரா கோஷம் விண்ணை பிளக்க சிறப்பான முறையில் நடைபெற்றது.Body:தேவேந்திரனை காத்த முருகப்பெருமானுக்கு தேவசேனாவுடன் திருமணம், அரோகரா கோஷம் விண்ணை பிளக்க சிறப்பான முறையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி, கோயில்மேடு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் மஹா கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் உபகோவிலான அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மஹா கந்தசஷ்டி திருவிழா கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் நவம்பர் ஆறாம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழாம் நாளான இன்று பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வளாகத்தில் தேவேந்திரனை காத்த முருகப்பெருமானுக்கு தேவேந்திரனின் மகளான தேவசேனாவுடன் திருமணம் நடைபெறும் சுபநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருமணத்தை கண்டு களித்து முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று விண்ணைப் பிளக்க பக்தி பரவசத்துடன் கூறி முருகனின் அருள் பெற்றனர். வந்திருந்த சுமங்கலிப் பெண்கள் அனைவருக்கும் திருமாங்கல்யம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தேவசேனா திருமணத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தினுள் பத்துக்கும் மேற்பட்ட பிச்சை எடுப்பவர்கள் வரும் பக்தர்கள் அனைவரையும் மிரட்டும் தொணியில் பணம் கேட்டு நச்சரித்தது காண்போரை முகம் சுளிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் பக்தர்களின் மனதில் வேதனையையும் உண்டாக்குவதாக அமைந்தது. பிச்சை எடுப்பவர்களுக்கு மத்தியில் கிளி ஜோசியம் பார்ப்பவரும் அமர்ந்து கொண்டு அவருடைய தொழிலையும் பார்த்தார். நிம்மதி தேடி வரும் பக்தர்களின் நிம்மதியை இழக்கச் செய்யும் வகையில் நடந்துகொள்ளும் இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பக்தர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Conclusion:தேவேந்திரனை காத்த முருகப்பெருமானுக்கு தேவசேனாவுடன் திருமணம், அரோகரா கோஷம் விண்ணை பிளக்க சிறப்பான முறையில் நடைபெற்றது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.