திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுலம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திருவாணன் (30) என்பவர் வெற்றி பெற்றார். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில் ஒன்றியக்குழு தலைவர்கள் தேர்தல் மறைமுகமாக நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அர்ஜுனன் என்பவர் தனக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென திருவாணனை தொடர்ந்து மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த திருவாணன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொட்டகுலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.