ETV Bharat / state

டாஸ்மாக்கை மூடக்கோரி இந்து முன்னணி போராட்டம் - thiruvannamalai hindu munnani protest

திருவண்ணாமலை: எடப்பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் உள்பட இந்து முன்னணியினர் ஐம்பத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

thiruvannamalai hindu munnani protests against tasmac
டாஸ்மாக்கை மூடக்கோரி இந்து முன்னணி போராட்டம்
author img

By

Published : Mar 9, 2020, 12:03 AM IST

திருவண்ணாமலையில் எடப்பாளையம் செல்லியம்மன் கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்து முன்னணி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் செந்தில் தலைமையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

நட்பு அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும், அரசு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், இல்லையேல் டாஸ்மாக் கடையை இடிப்போம் போன்ற கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

டாஸ்மாக்கை மூடக்கோரி இந்து முன்னணி போராட்டம்

இதையும் படிங்க: டாஸ்மாக் பணியாளர்கள் மார்ச் 12ஆம் தேதி போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.