திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அண்ணாமலையார் கோவில், மாடவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் செயல்படும் விதம் குற்றவாளிகளை கண்டறியும் செயலி பொதுமக்களின் பாதுகாப்பு அனைத்தையும் முறையாக கையாள வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பான்கள், கோவில் அருகே உள்ள நகர காவல் நிலையத்தையும் ஆய்வு செய்தார். அப்பொழுது நகர காவல் நிலையத்தை சுத்தமாக பராமரித்து வந்ததும் காவல் நிலைய கோப்புகளை முறையாக பராமரித்து வந்த நகர காவல் நிலைய எழுத்தர் சுகுமாருக்கு 5000 ரூபாய் வழங்கி கௌரவித்தார்.
மேலும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்து அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமரா பழுதடைந்தால் உடனடியாக மாற்றி கண்காணிக்க வேண்டுமென காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:அண்ணாமலையார் தீபத்திருவிழா - 6ஆம் நாளில் 63 நாயன்மார்கள் ஊர்வலம்!