நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இதனால், நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கையும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் வெளிநாடு சென்றுவிட்டு நாடு திரும்பியவர்கள் மூலம் பரவத் தொடங்கியது.
இதன் காரணமாக வெளிநாடு சென்று திரும்பியவர்களை மத்திய, மாநில அரசுகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வெளிநாடு சென்று திரும்பிய 38 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில், வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர் கேரள மாநிலத்தில் நீட் தேர்வுக்கு படிக்க சென்றுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் லாரி டிரைவராக பணிபுரிய சென்ற மூன்று பேர், வடவணக்கம்படி, கடம்மை, தெள்ளார், சாத்தம்பூண்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலிருந்து ஜெர்மனி, பெல்ஜியம், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பணிபுரிந்து திரும்பிய பத்து பேர், மேலும் சுற்றுலாச் சென்று வந்தவர்கள், வெளிமாநிலத்திலிருந்து சொந்த ஊருக்கு வந்த 24 பேர் என ஆக மொத்தம் 38 பேரை சுகாதாரத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் முத்துகுமாரசாமி தலைமையில் மருத்துவக்குழு அவர்களை தனிமைப்படுத்திக் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், இன்று அவர்களின் வீட்டின் வெளியே தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர். மேலும் அவர்கள் எப்படி வீட்டின் உள்ளே இருக்க வேண்டும், உணவு உட்கொள்ளும் முறை குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் மருத்துவக் குழு நாள்தோறும் அவர்கள் வீட்டிற்குச் சென்று கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிறுமி பாலியல் வன்புணர்வு: காரைக்காலில் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!