ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் விழா - அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் விழா

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் இருவரும் ஊடல் கொள்ளும் திருவூடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் விழா
அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் விழா
author img

By

Published : Jan 17, 2023, 9:05 AM IST

அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் விழா

திருவண்ணாமலை: மாட்டுப்பொங்கலையொட்டி திருவண்ணாமலையில் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் திவூடல் கொண்ட நிகழ்வு நடைபெற்றது. இந்த திருவூடல் கணவன் மனைவிக்கு இடையே நடைபெறும் ஊடலை விளக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வின் பின்னனியாவது, பிருங்கி மகரிஷி முக்தியடைவதற்காக அண்ணாலையார் நேரில் சென்று காட்சியளிக்க விரும்புகிறார். அதனை அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனிடம் கூறுகிறார். அதற்கு உண்ணாமுலையம்மன் அவர் தன்னை மதிக்கவில்லை உங்களை மட்டுமே மதிக்கின்றார். ஆகையால், நீங்கள் சென்று அவருக்கு காட்சியளித்து முக்தி அடைய செய்யக்கூடாது என்று கூறுவாதால் இருவருக்கும் இடையே ஊடல் ஏற்படுகிறது.

இருப்பினும் அண்ணாமலையார் தனியாக சென்று பிருங்கி மகரிஷிக்கு காட்சியளிக்கிறார். இதனால் கோபம் கொண்ட உண்ணாமுலையம்மன் ஊடல் கொண்டு திருமஞ்சன கோபுரம் வழியாக தனியே கோயிலுக்கு சென்றுவிடுவார். பின்னர் அண்ணாமலையார் மட்டும் தனியாக சென்று குமரக்கோயிலில் தங்கி மறுநாள் பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்து கிரிவலம் வருவார். இதனடிப்படையிலேயே அண்ணாமலையார் கோயிலில் மறுஊடல் நடைபெறுகிறது. இந்த திருவூடல் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டடு திருவூடல் நிகழ்வினை பார்த்தனர்.

இதையும் படிங்க: தருமபுரி பெலமாரன அள்ளியில் களைக்கட்டிய 'எருது விடும் திருவிழா'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.