ETV Bharat / state

கொடியேற்றத்துடன் தொடங்கியது உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவம்! - special poojas

அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் கொடியோறத்துடன் தொடங்கியது.

அண்ணாமலையார் கோயில்
அண்ணாமலையார் கோயில்
author img

By

Published : Jan 6, 2023, 9:01 AM IST

Updated : Jan 6, 2023, 12:10 PM IST

கொடியேற்றத்துடன் தொடங்கியது உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவம்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதில் உத்ராயண புண்ணிய கால உற்சவம் முக்கியமான நிகழ்வாகும். இந்த ஆண்டுக்கான உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று (ஜனவரி 6) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

வைச ஸ்தலங்களில் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். இதில் வைகுந்த வாசல் திறப்பு, ஆருத்ரா தரிசனம், ஆனி மாத கொடியேற்றம், ஆனி திருமஞ்சனம், உத்ராயண மற்றும் தட்சிணாயன புண்ணிய கால பிரம்மோற்சவம், ஆடிப்புரம் மற்றும் கார்த்திகை தீபம் கொடியேற்றம் ஆகியவை மிக முக்கியமானதாகவும்.

12 மாதங்களில் சூரியன் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தெற்கு நோக்கியும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கியம் நகரும் காலமாக ஆகம நூல்கள் கூறுகின்றது. சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்ராயண புண்ணிய காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம் தட்சிணாயிண புண்ணிய காலமாகும்.

உத்ராயண புண்ணிய காலம் இன்று தொடங்குவதை முன்னிட்டு உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விநாயகர், சந்திரசேகரர், உண்ணாமுலையம்மன் கோயில் கொடிமரத்தின் அருகே எழுந்தருளினார். இன்று காலை 06:15 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக அதிகாலையில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இன்று முதல் 10 நாட்கள் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர், அம்பாள் ஆகியோரின் மாடவீதியுலா நடைபெறும். தை திங்கள் முதல் நாள் ஜனவரி 14ம் தேதி அன்று திருவண்ணாமலை தாமரை குளத்தில் அண்ணாமலையாரின் தீர்த்தவாரி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆருத்ரா தரிசனம்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

Last Updated : Jan 6, 2023, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.