தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மங்கலம், செங்கம் வட்டத்தில் தலா மூவர், தண்டராம்பட்டு வட்டத்தில் இருவர், நாவல்பாக்கம், பெருங்காட்டூர் வட்டத்தில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் இன்று கரோனாவால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 429ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகம் பாதித்த மாவட்டத்தில் திருவண்ணாமலை மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.