திருவண்ணாமலை அருகே வந்தவாசி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்குவதை முறைப்படுத்த வலியுறுத்தியும்; ரேஷன் கடையில் பொருட்கள் சரிவர வழங்காததைக் கண்டித்தும் கிராமப்பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதை முறைப்படுத்த வேண்டும் மற்றும் ரேஷன் கடையில் பொருட்களை முறையாக வழங்க வேண்டும் என்று கூறி வந்தவாசி - ஆரணி நெடுஞ்சாலையில் உள்ள தெள்ளூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வந்தவாசி காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் சமரசம் செய்ததின் பேரில் சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் வந்தவாசி முதல் ஆரணி நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:'மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைப்பது தேவையில்லாத ஒன்று' - டிடிவி தினகரன்