திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே கஞ்சா பயிரிட்டு வளர்க்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா மற்றும் ஜமுனாமரத்தூர் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவயிடதுக்கு விரைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஜமுனாமரத்தூர் பால்வாரி மலை கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரது நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 2 1/2 கிலோ எடை கொண்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன. இதனிடையே சங்கர் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் பலி!