ETV Bharat / state

அண்ணாமலையார் கோவில் கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் - Karthikai Deepam festival

அண்ணாமலையார் கோவில் ஒன்பது கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 18, 2022, 11:58 AM IST

திருவண்ணாமலை : பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்கியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பாக பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்படுகிறது.

கரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாடவீதிகளில் நடைபெறாமல் இருந்த கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அண்ணாமலையார் கோவில் கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

பஞ்ச மூர்த்திகளின் வாகனங்கள்,மகா ரத தேர்களை சீரமைக்கும் பணிகள், வாகனங்களுக்கு வன்னம் தீட்டும் பணிகள் என அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று அண்ணாமலையார் கோயிலின் கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. சென்னையில் இருந்து வரவைக்கப்பட்டுள்ள 54 மீட்டர் உயரம் கொண்ட உயர் நீட்டிப்பு ராட்சத ஏணிகளின் மூலம் ராஜகோபுரத்தினை சுத்தம் செய்யும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொடந்து கிழக்கு,வடக்கு, மற்றும் தெற்கு கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.