திருவண்ணாமலை: ஆரணி அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் பிரசாந்த் (17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் பிரசாந்த் 3 பாடங்களில் தோல்வி அடைந்தது தெரியவந்தது.
மனமுடைந்த பிரசாந்த் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மது பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் சிறுவர் பூங்கா