திருவண்ணாமலை மாவட்டம் முத்து விநாயகர் கோயில் தெருவில் உள்ள முத்து விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் சன்னதி உள்ளது. இவ்விளக்கு பூஜையில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பெண்கள் அனைவரும் முன்னதாக பெயர் பதிவு செய்துகொண்டனர்.
பின்னர் பூஜையில் கலந்துகொண்ட ஏராளமான பெண்கள் அனைவரும் குத்து விளக்குடன் வந்து 200 ரூபாய் கட்டணமாக செலுத்தி, திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத குத்துவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.
இந்தக் குத்து விளக்கு பூஜையில் ஆன்மீக பக்தகோடிகள், மெய்யன்பர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் திருவருளைப் பெற்றனர்.