ETV Bharat / state

பள்ளி விளையாட்டு விழாவில் பங்கேற்ற ஒலிம்பிக் வீரர்!

திருவண்ணாமலை: செங்கத்தில் அமைந்துள்ள சிகரம் பள்ளியின் மூன்றாம் விளையாட்டு தினத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சாந்த முத்துவேல் கலந்துகொண்டார்.

author img

By

Published : Dec 1, 2019, 3:41 PM IST

school sports day tiruvannamalai  santha muthuvel participated in school sport day in thiruvannamalai  sikaram school sports day  திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்  சிகரம் பள்ளி விளையாட்டு விழா  santha muthuvel
பள்ளி விளையாட்டு விழாவில் பங்குபேற்ற ஒலிம்பிக் வீரர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அமைந்துள்ள சிகரம் சர்வேதச பள்ளியின் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு அந்த பள்ளியின் தாளாளர் வணங்காமுடி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சாந்த முத்துவேல் கலந்து கொண்டார்.

மூன்றாமாண்டு விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர் அனைவருக்கும் ஓட்டப் பந்தயம், சிலம்பம், கபாடி, யோகா, கராத்தே போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவர்கள் கலந்துகொண்டு அவரவர் திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர், இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பள்ளி விளையாட்டு விழாவில் பங்கேற்ற ஒலிம்பிக் வீரர்

இதனையடுத்து மாணவர்கள் மத்தியில் பேசிய சாந்த முத்துவேல், மாணவர்களுக்கு விளையாட்டின் அவசியம் குறித்தும், வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். இதில், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ‘சின்னமனூர் முதல் சிகாகோ’ வரை மோடியைப் பற்றி பேசினேன்: எம்.பி. ரவீந்திரநாத் குமார்!

Intro:சிகரம் பள்ளியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தினம்,
சிறப்பு அழைப்பாளராக பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சாந்த முத்துவேல் கலந்து கொண்டார்.Body:திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சிகரம் பள்ளியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இயங்கிவரும் சிகரம் (சி பி எஸ் சி) சர்வதேச பள்ளியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தினம் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் வணங்காமுடி தலைமை தாங்கினார், சிறப்பு அழைப்பாளராக சாந்த முத்துவேல் பாரா ஒலிம்பிக் இல் தங்கப்பதக்கம் வென்றவர் கலந்து கொண்டார், இப்பள்ளியின் நிர்வாக இயக்குனர் இலக்கியா முன்னிலை வகித்தார்.
பள்ளியின் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர் அனைவருக்கும் ஓட்டப்பந்தயம், சிலம்பம், கபடி, யோகா, கராத்தே போன்ற பலவிதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது இதில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு அவரவர் திறமைகளை வெளிப்படுத்தினர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது, சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த சாந்த முத்துவேல் மாணவர்களுக்கு விளையாட்டின் அவசியம் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர், பள்ளியின் தாளாளர் மாணவர்களின் பெற்றோர்களை ஊக்குவிக்கும் வகையில் எதிர் பார்க்காத விதமாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு விளையாட்டு போட்டியாக இசை பந்து என்ற விளையாட்டை ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளாக நடத்தினார், இதில் வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு பரிசு வழங்கியது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக அமைந்தது.

Conclusion:சிகரம் பள்ளியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு தினம்,
சிறப்பு அழைப்பாளராக பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சாந்த முத்துவேல் கலந்து கொண்டார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.