திருவண்ணாமலை முன்னாள் ராணுவப் படை வீரர்கள் மருத்துவமனையில் ஓய்வுபெற்ற கர்னல் ருசிகேசவன் அவர்கள் அலுவலக பொறுப்பு அதிகாரியாகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் திருவண்ணாமலை முன்னாள் ராணுவப் படை வீரர்கள் ஒருங்கிணைப்பின் மாவட்ட தலைவர் கருணாநிதி, பொறுப்பு அதிகாரி அவர்களை வரவேற்று பொன்னாடை போர்த்தினார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி, பல் மருத்துவர் ஆகியோர் பொறுப்பதிகாரிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியின் நிறைவாக நர்சிங் உதவியாளர் சகாதேவன் நன்றி கூறினார்.