ETV Bharat / state

திருவண்ணாமலை தீபத் திருவிழா; மலையேற எத்தனை பேருக்கு அனுமதி தெரியுமா? - tiruvannamalai girivalam

Tiruvannamalai deepam festival: திருவண்ணாமலை தீபத் திருநாளை முன்னிட்டு வரும் ஏராளமான பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யும் பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை தீபத் திருநாள் குறித்த அரசு வழிகாட்டல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 1:58 PM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 26ஆம் தேதி அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு, அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் கோயில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யும் பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், துறை சார்ந்த அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் பக்தர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்து 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், பாதுகாப்பு பணிகளுக்காக 14 ஆயிரம் காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 85 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளதாகவும் திட்டமிடப்பட்டது.

மேலும், 9 தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பக்தர்களை அழைத்து வர, 150 சிறப்பு பேருந்துகள் இலவசமாக இயக்கப்படும் என்றும், கார்த்திகை தீபம் நடைபெறும் பத்து நாட்களும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும், திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட பகுதிகளில் 226 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அதிகாலை நடைபெறும் பரணி தீப நிகழ்வுக்கு 4 ஆயிரம் பக்தர்களும், மாலை நடைபெறும் மகா தீப நிகழ்வுக்கு 7 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, மகா தீபத்தன்று மலையின் மீது ஏற முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், 2 ஆயிரத்து 500 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கோயில் வளாகத்திற்குள் இதய நோய் மருத்துவப் பிரிவு அடங்கிய மருத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும், மலையின் மீது அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில் தரிசனக் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்.. பக்தர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.