ETV Bharat / state

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்! - இந்திய செஞ்சிலுவைச் சங்கம் நூற்றாண்டு விழா

திருவண்ணாமலை: செஞ்சிலுவைச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

red cross medical camp tiruvannamalai  இந்திய செஞ்சிலுவைச் சங்கம்  இந்திய செஞ்சிலுவைச் சங்கம் நூற்றாண்டு விழா
இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நூற்றாண்டு விழா
author img

By

Published : Feb 22, 2020, 12:55 PM IST

இந்திய செஞ்சிலுவைச் சங்கம்-திருவண்ணாமலை மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை இணைந்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் 100ஆவது ஆண்டை முன்னிட்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின.

ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் சிறந்த மருத்துவர்களால் இலவச மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு போன்றவற்றிற்கு ஆலோசனை மற்றும் சிகிச்சையளிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்

மேலும், பல், தோல், கண், காது, மூக்கு, தொண்டை, குழந்தை நலம், பெண்களுக்கான பொது மருத்துவம், மூட்டுவலி, இடுப்புவலி, இதயம் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் தனித்தனியாக மருத்துவம் பார்க்கப்பட்டது.

இம்முகாமில், மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் என ஏராளமானோர் பயன்பெற்றனர்.

திருவாரூர்

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிப் பேரணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், பேரணியில் கலந்துகொண்டோருக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நன்னிலம் வட்டக்கிளை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வள்ளலார் குருக்குலமில் செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வள்ளலார் குருகுலம் மெட்ரிக் பள்ளியின் சார்பாக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ரூ.5 ஆயிரம் நிதியாக வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்தியன் ரெட் கிராஸ் வட்டாரத் தலைவர் உத்தமன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், வட்டாரச் செயலாளர் பாரி, பள்ளி முதலமைச்சர் பரிமள காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அச்சங்கத்தின் கௌரவத் தலைவர் ராஜ்குமார் உள்பட பல்வேறு மாணவ, மாணவிகள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.