ETV Bharat / state

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

author img

By

Published : Feb 15, 2021, 1:30 PM IST

திருவண்ணாமலை: சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் அருகேயுள்ள காப்புக்காட்டில், துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கலசபாக்கம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.அசோக்குமார் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் வந்து விசாரணை செய்தார். அதில் அப்பெண் இறந்து இரண்டு நாள் ஆனது தெரியவந்தது.

மேலும் மோப்ப நாய் மியா, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இறந்த பெண் யார், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டாரா? போன்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கமலாலயக் குளத்தில் கிடந்த இளைஞரின் உடல்: போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.