திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டத்தின்கீழ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் பொதுமக்கள் நலன்கருதி பௌர்ணமி நாளான அக்டோபர் 1ஆம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 01:10 மணிமுதல் அக்டோபர் 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 02:55 மணி வரை கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள், பொதுமக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே அருணாச்சலேஸ்வரர் மலையைச் சுற்றி கிரிவலம் செல்ல பக்தர்கள், பொதுமக்கள் வருகைபுரிய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஏழாவது மாதமாக பெளர்ணமி கிரிவலம் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக மாநிலம் முழுவதும் உள்ள திருக்கோயில்கள் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறப்பதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் சுகாதாரம், தகுந்த இடைவெளி போன்ற பல்வேறு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் பல்வேறு கோயிகளின் ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகள், வைபோகங்கள் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை அருகே போலி மருத்துவர் கைது