ETV Bharat / state

திருவண்ணாமலை அருகே மயான பாதை ஆக்கிரமிப்பு - வழி வேண்டி நடந்த ஆர்ப்பாட்டம் - பொதுமக்கள் எதிர்ப்பு

மயான பாதை ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி, பரமனந்தல் கிராம மக்கள் ஆக்கிரமிப்பு விளைநிலத்தில் இறங்கி சடலத்தை எடுத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பரமனந்தல் மயான பாதைக்கு வழி வேண்டி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Oct 4, 2022, 6:33 PM IST

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த பரமனந்தல் அம்பேத்கர் நகர், பழைய அம்பேத்கர் நகர், காந்தி நகர் என்னும் பகுதிகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட அனைத்து சமூக குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இறப்பவர்களை நல்லடக்கம் செய்ய காலம் காலமாகப் பயன்படுத்தி வந்த மயான பாதையில் சடலத்தை எடுத்துச்செல்ல ராமநாதன் என்பவர் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.

மயான பாதை வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அவருடைய அண்ணன் முனுசாமி அவரது தம்பி ராமமூர்த்தி, தம்பி சம்பத் என்பவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் சடலத்தை எடுத்துச்செல்ல 12 அடி அகலம் உள்ள வழியினை அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக தந்துள்ளனர்.

ஆனால், ராமநாதன் தன் பாகத்தில் உள்ள வழியினை தர மறுத்து பயிர்செய்து மயான பாதைக்கு செல்ல எதிர்ப்புத் தெரிவித்தும், மீதமுள்ள வழியான ஆற்றின் நீர் பிடிப்புப்பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டு விவசாயம் செய்து வருவதால், அப்பகுதி மக்கள் சடலத்தைக்கொண்டு செல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

நேற்று அப்பகுதியில் மணி என்பவர் உயிரிழந்ததை அடுத்து அவ்வழியாக சடலத்தைக் கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர். அப்போது மயான பாதை வழியே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றக்கோரி சவத்தை சாலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில், மறியலில் ஈடுபட்டவர்களிடம் மாற்று வழியில் சடலத்தைக்கொண்டு செல்லும்படி காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவண்ணாமலை அருகே மயான பாதை ஆக்கிரமிப்பு - வழி வேண்டி நடந்த ஆர்ப்பாட்டம்

செங்கம் வட்டாட்சியர் முனுசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் சின்னராஜ், என வருவாய் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் காலம் காலமாக சடலத்தைக் கொண்டு செல்லும் வழியை மாற்றி செல்ல மறுத்து, சடலத்துடன் விளை நிலத்தில் இறங்கி, சடலத்தைக் கொண்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 1.5 கோடி ரூபாயை எட்டிய அண்ணாமலையார் கோயிலின் ஆவணி மாத உண்டியல் காணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.