ETV Bharat / state

அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு: அரிசி ஆலைகள் வேலை நிறுத்தம்! - Rice mills

மத்திய அரசு, அரிசிக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதித்ததை எதிர்த்து, ஆரணியில் அரிசி ஆலை நிர்வாகத்தினர் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு: அரிசி ஆலைகள் வேலைநிறுத்தம்!

author img

By

Published : Jul 16, 2022, 5:17 PM IST

திருவண்ணாமலை: ஆரணி மற்றும் களம்பூர் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த அரிசி ஆலை தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் அரிசி சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஆரணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில், நாள் ஒன்றுக்கு சுமார் 300-லிருந்து 500 டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு அரிசிக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை அறிவித்துள்ளது.

இதனால் விவசாயிகள், அரிசி உற்பத்தியாளர்கள், அரிசி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு மத்திய அரசைக் கண்டித்து இன்று ஆரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் அடைக்கப்பட்டு, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு: அரிசி ஆலைகள் வேலைநிறுத்தம்!
அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு: அரிசி ஆலைகள் வேலைநிறுத்தம்!

அதேநேரம் தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பால், அரிசி விலை உயர வாய்ப்புள்ளதாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மாவு அரைக்கும் இயந்திரத்திற்கு 18% ஜிஎஸ்டி: சிறு, குறு நிறுவனங்களைப் பாதிக்கும் – வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.