ETV Bharat / state

Pongal: நாட்டு வெல்லம் தயாரிப்பில் லாபம் - விவசாயிகள் திருப்தி!

பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு நாட்டு வெல்லம் தயாரிப்பில் அதிகளவில் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாட்டு வெல்லம் தயாரிப்பு
நாட்டு வெல்லம் தயாரிப்பு
author img

By

Published : Jan 12, 2023, 3:25 PM IST

நாட்டு வெல்லம் தயாரிப்பு

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும்பாலானோர் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இதில் சிலர் கரும்பு பயிரிட்டு, அதன் மூலம் நாட்டு சர்க்கரை மற்றும் நாட்டு வெல்லம் தயாரித்து வருகின்றனர். இதனால் ஓரளவு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கானலாபாடி மற்றும் கோவூர் ஆகிய கிராமங்களில் ஒரு ஆண்டு பயிரான கரும்பு பயிரிட்டு, இதனை அறுவடை செய்து சொந்தமாக நாட்டு சர்க்கரை மற்றும் நாட்டு வெல்லம் தயாரித்து வருகின்றனர். இதில் ஒரு ஏக்கர் இடத்தில் 30 முதல் 40 டன் வரை அறுவடை செய்து, ஒரு நாளைக்கு 3 டன் வரை, அறுவடை செய்து, கரும்பு ஆலை மூலம் அரைத்து, கரும்புச் சாற்றை கொப்பரையில் கொதிக்க வைத்து, அதன் மூலம் நாட்டுச் சர்க்கரை மற்றும் நாட்டு வெல்லம் தயாரித்து வருகின்றனர்.

இதில் கரும்பு அறுவடை செய்து மில்லுக்கு அனுப்பினால் ஒரு டன்னுக்கு 2,500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். அதையே நாட்டு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை தயாரிப்பதன் மூலம் 1 டன்னுக்கு ரூபாய் 4 ஆயிரம் முதல 5ஆயிரம் ரூபாய் வரை கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது பொங்கல் பண்டிகை வருவதால் வெல்லம் விலை உயந்துள்ளதாகவும், இதனால் நாட்டு வெல்லம் தயாரிப்பு மூலம் ஒரு ஏக்கரில் செலவினங்கள் போக சுமார் ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பானை தயாரிக்கும் பணி தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.