ETV Bharat / state

அண்ணாமலையார் கோயில் பிடாதி அம்மன் உற்சவம்: சிம்ம வாகனத்தில் எழுந்துருளி காட்சி!

திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறவிருப்பதை முன்னிட்டு கோயில் காவல் தெய்வமான பிடாரியம்மன் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 11:08 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பிடாதி அம்மன் உற்சவம்

அண்ணாமலையார் கோயில் பிடாதி அம்மன் உற்சவம்

திருவண்ணாமலை: அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் காவல் தெய்வமான அருள்மிகு பிடாரியம்மனுக்கு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிடாரியம்மன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நினைத்தாலே முக்திதரும் அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து காலையிலும் இரவிலும் 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் திருக்கோயிலின் நான்கு மாட விதிகளைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி அருள்பாலிப்பார்.

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வருகிற 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கி 26ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணியளவில் கோயில் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவிருக்கிறது. இதற்கு முன்னதாக நேற்று(நவ.14) அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள காவல் தெய்வமான பிடாரியம்மனுக்கு சிறப்புப் பூஜையுடன் தீப ஆரிதனை நடைபெற்றது.

இதையும் படிங்க: விவசாயிகளை காக்க 'பயிர் காப்பீடு திட்டம்' அறிமுகம் செய்ய வேண்டும் - விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் யோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.