திருவண்ணாமலை மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரது மகன் அன்பு வேலன் (45). இவர் அப்பகுதியில் 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்திவருகிறார்.
இவரிடம் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் ஏலச்சீட்டு பணம் கொடுத்து வந்தனர். கடந்த 6 மாதங்களாக அன்பு வேலன் பணம் கொடுத்தவர்களை ஏமாற்றிவந்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரணி நகர காவல் நிலையத்தை இன்று (பிப்.2) முற்றுகையிட்டனர்.
மேலும் தங்களிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகவும் அன்பு வேலன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் புகார் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரைத் தெரியும் எனக்கூறி ரூ. 33 லட்சம் மோசடி