ETV Bharat / state

வட்டாட்சியர் அலுவலக வளாகத்தினுள் கழிவுநீர் - நடவடிக்கை எடுக்குமா அரசு?

திருவண்ணாமலை: வட்டாட்சியர் அலுவலக வளாகத்தினுள் உழவர் சந்தைக்குச் செல்லும் வழியில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் அவலநிலையைத் தடுக்க, வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கழிவுநீர் தேங்கிய பாதை
author img

By

Published : Oct 6, 2019, 10:05 PM IST

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தினுள் உள்ள உழவர் சந்தைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்வர். அவர்கள் செல்லக்கூடிய வழியானது சேறும் சகதியுமாக துர்நாற்றம் பரப்பிக்கொண்டும் பார்ப்பதற்கு சகிக்க முடியாத நிலையிலும் காணப்படுகிறது.

திருவண்ணாமலை உழவர் சந்தை செல்லும் வழியில் திறந்த நிலையில் உள்ள கால்வாய்!

இந்நிலையில் அங்கு தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சலை பரப்பும் அபாயமும் உருவாகி வருகிறது. மேலும் அவ்வழியில் உள்ள கால்வாய் திறந்தே உள்ளதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்த அவல நிலையை போக்க வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படியுங்க:

மகப்பேறு மருத்துவமனை கால்வாயில் கழிவுகள் தேக்கம் - நோய் பரவும் அபாயம்

Intro:திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தினுள் உழவர் சந்தைக்குச் செல்லும் வழியில் கால்வாய் திறந்தும், மழைநீர், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் அவலநிலை, வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு.Body:திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தினுள் உழவர் சந்தைக்குச் செல்லும் வழியில் கால்வாய் திறந்தும், மழைநீர், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் அவலநிலை, வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தினுள் உள்ள உழவர் சந்தைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை அன்றாடம் வாங்கிச் செல்வது வழக்கம்.

அவர்கள் செல்லக்கூடிய வழியானது துர்நாற்றம் வீசக்கூடிய வகையில் பார்ப்பதற்கு சகிக்க முடியாத நிலையிலும் முகம் சுளித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

சேறும் சகதியுமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு சரியாக குப்பைகள் அல்ல படாமல் அங்கே கால்நடைகள் திரியும் நிலை காணப்படுகிறது.

அவ்வழியில் உள்ள கால்வாய் திறந்தே உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

மேலும் வழியில் குட்டை போல் தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பும் அபாயமும் உருவாகி வருகிறது.

இந்த நிலையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் அவ்வழியே சென்று வருகின்றனர்.

எனவே இந்த அவல நிலையை போக்க வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்து விபத்து மற்றும் நோய் பரவுவதை வரும்முன் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்த அவல நிலையை போக்க நடவடிக்கை எடுப்பாரா வட்டாட்சியர்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.Conclusion:திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தினுள் உழவர் சந்தைக்குச் செல்லும் வழியில் கால்வாய் திறந்தும், மழைநீர், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் அவலநிலை, வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.