திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான தடகள போட்டி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார். இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த தடகள போட்டிகள் நடைபெறுகின்றன.
இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்த போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 25 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 950 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில், 100மீ, 200மீ, 400மீ, 3,000 மீட்டர் பிரிவுகளில் ஓட்டப்பந்தயமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
முதல் நாளான இன்று பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.