ETV Bharat / state

தாய்க் கட்சிக்குத் திரும்பினார் முன்னாள் எம்எல்ஏ!

திருவண்ணாமலை: முன்னாள் எம்எல்ஏ மணிவர்மா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனது தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

manivarma, Congress party
author img

By

Published : Jun 12, 2019, 2:08 PM IST

முன்னாள் எம்எல்ஏ மணிவர்மா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனது தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேரும் நிகழ்ச்சி, மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மணிவர்மா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிகழ்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேஎஸ் அழகிரி, மணிவர்மா காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைகிறார். அவருடன் 5,000 பேரும் இணைகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற முறையில் மணிவர்மா அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்கின்றேன் என்றார்.

மணிவர்மா

மேலும், தமிழ்நாட்டில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இந்த குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு முறையான சரியான திட்டம் எதுவும் எடப்பாடி அரசிடம் இல்லை என்று விமர்சித்த அவர், நீட் தேர்வைப் பொருத்தவரை தமிழ்நாடு மாணவர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் நான்கு சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என சுட்டிக்காட்டினார்.

Intro:முன்னாள் எம்எல்ஏ மணிவர்மா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனது தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேரும் நிகழ்ச்சி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது.

Body:முன்னாள் எம்எல்ஏ மணிவர்மா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனது தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேரும் நிகழ்ச்சி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் முன்னாள் எம்எல்ஏ மணிவர்மா அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த இணைப்பு நிகழ்ச்சி தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கேஎஸ் அழகிரி கூறியதாவது,

நண்பர் மணிவர்மா அவர்கள் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைகிறார் அவர் இணைவதன் மூலம் ராகுல்காந்தியின் உடைய கரங்களை வலுப்படுத்த உதவும் தமிழக காங்கிரசை மேலும் வலுப்படுத்துவதற்கு அவருடைய வருகை மிகவும் உதவிகரமாக இருக்கும். இன்று 5000 பேர் அவருடன் இணைந்து உள்ளார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற முறையில் மணிவர்மா அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்கின்றோம்.

தமிழகத்தில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் நிலவுகிறது இந்த குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு முறையான சரியான திட்டம் எதுவும் எடப்பாடி அரசிடம் இல்லை.

நீட் தேர்வை பொருத்தவரை தமிழக மாணவர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அரசுப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 4% மட்டுமே தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசை 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட ஆணை பிறப்பித்துள்ளது இதனை கர்நாடக அரசு மதித்து நீரை திறந்துவிட வேண்டும் மீண்டும் மக்களை சந்திப்போம் விவசாயிகளை சந்திப்போம் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கூறும் கர்நாடக அரசை தமிழ் காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

அதிமுகவினருக்கு பரந்த மனப்பான்மை இல்லாத காரணத்தால் மக்கள் செல்வாக்கை முதலில் இழந்தார்கள் தற்போது அரசியல் ரீதியாகவும் இழப்பினை சந்தித்துள்ளார்கள். அவர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருந்திருந்தால் மத்திய அரசில் ஒன்று அல்லது இரண்டு அமைச்சர்களை பெற்றிருக்க முடியும்.

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களிடம் கூறினார்.

Conclusion:முன்னாள் எம்எல்ஏ மணிவர்மா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனது தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேரும் நிகழ்ச்சி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.