திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் நுகர்வோருக்கு நேரடியாக விலையில் கிடைக்கும் வகையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் திருவண்ணாமலை, தாமரை நகர், செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் கீழ்பென்னாத்தூர் ஆகிய 8 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன.
தற்போது , சேத்பட் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள சேத்பட் ஒழுங்குமுறை விற்பனைக் குழு வளாகத்தில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் நேற்று ( 17.07.2021 ) ஆய்வு செய்தார் .
சேத்பட் பேரூராட்சி பகுதியில் புதிய உழவர் சந்தை அமைக்கப்படுவதால் சுற்று வட்டாரத்தில் உள்ள 76 கிராமங்களை சேர்ந்த 23,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவார்கள். சேத்பட் உழவர் சந்தையில் தினமும் 5-10 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் வரும் என எதிர்பார்கப்படுகிறது.
மேலும், உழவர் சந்தைக்கு தினமும் 600க்கும் மேற்பட்ட நுகர்வோர் காய்கறிகள், பழங்கள் வாங்குவதற்கு வருகை புரிவார்கள். தற்போது சேத்பட் பஜார் மார்கெட்டில் பொதுமக்கள் காய்கறிகள், பழங்களை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். சேத்பட் புதிய உழவர் சந்தை அமைக்கப்படுவதால் குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் கிடைக்க வழிவகை ஏற்படும்.
மேலும், இந்த உழவர் உந்தையில் சுற்று வட்டாரத்தில் உள்ள 76 கிராமங்களை சேர்ந்த விவாசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் உற்பத்தி செய்யும் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யலாம் .