ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் சிவராத்திரியையொட்டி லிங்கோத்பவர் பூஜை! - thiruvannamalai

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா நேற்று விமரிசையாக நடந்தது. கரோனா விழிப்புணர்வு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு விழாவிற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அண்ணாமலையார் கோயிலில் சிவராத்திரியையொட்டி நள்ளிரவில் லிங்கோத்பவர் பூஜை

author img

By

Published : Mar 13, 2021, 7:53 AM IST

மகா சிவராத்திரி உருவான திருத்தலம் எனும் பெருமைக்குரியது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இங்கு பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் இடையே ஏற்பட்ட 'நான்' எனும் அகந்தையை அழித்து, லிங்கோத்பவ மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளிய திருநாள் மகா சிவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா, அண்ணாமலையார் கோயிலில் நேற்று (மார்ச்.12) விமரிசையாக நடந்தது. அதையொட்டி அதிகாலை 3 மணிக்கு அண்ணாமலையாருக்கும், உண்ணாமலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5 மணி முதல் பகல் 12.30 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. மற்றும் பகல் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், இரவு 8 மணிக்கு சந்திரசேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருந்தது. தொடர்ந்து இரவு நான்கு கால பூஜை நடைபெற்றது. முதல் கால பூஜையை பிரம்மாவும், இரண்டாம் காலபூஜையை திருமாலும், மூன்றாம் கால பூஜையை உமையாளும், நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் நிறைவேற்றுவதாக ஐதீகம்.

அண்ணாமலையார் கோயிலில் சிவராத்திரியையொட்டி நள்ளிரவில் நடைபெற்ற லிங்கோத்பவர் பூஜை

மேலும், மகா சிவராத்திரியின் சிறப்பு நிகழ்வான லிங்கோத்பவர் சிறப்பு பூஜை நள்ளிரவு 12 மணியளவில் நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் கருவறையின் மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அடிமுடி காணும் திருவிளையாடலில் பொய் சாட்சி சொன்னதால், சிவபூஜைக்கு உதவாது என இறைவனால் சபிக்கப்பட்ட தாழம்பூ சிவராத்திரி தினத்தன்று நடைபெறும் நள்ளிரவு பூஜையின்போதுமட்டுமே பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

இதில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ராஜ கோபுரம் முன்பு உள்ள சக்கர தீர்த்தக்குளத்தில் பக்தர்கள் அகல் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

இதையும் படிங்க: ஹாட்ஸ்டாரில் வெளியானது ஆர்யாவின் டெடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.