திருவண்ணாமலை காமராஜர் சிலையில் இருந்து அண்ணா சிலை வரை மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், மாநில அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும், பல்வேறு வேளாண் திட்டங்களுக்கு மானியங்கள் குறைப்பதை கைவிட வேண்டும், சமையல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மதரீதியாக மக்களை பிளவுபடுத்தக் கூடாது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ-யின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன் கூறுகையில்,
"மத்திய பட்ஜெட்டால் பாஜகவுக்கு பொருளாதாரம் பெறுகுமே தவிர, இந்திய நாட்டின் பொருளாதாரம் வளம் பெறாது. பொதுத்துறையை விற்கும் மத்திய மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ்நாடு அரசு கடலில் மூழ்கக் கூடிய வரவு-செலவுத் திட்டத்தை வெளியிட்டு தமிழ்நாட்டை அடகு கடையில் வைத்து விட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐயின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் பாண்டி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். சிபிஐ மாவட்ட செயலாளர் முத்தையன், சிபிஎம் மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினர்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் அதிகளவு நெல் சாகுபடி - கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரிக்கை