திருவண்ணாமலை: பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று, ஆட்சியரிடத்தில் மனு அளிக்கவந்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், “திருவண்ணாமலை நகராட்சிக்குள்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் இந்து தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் அருந்ததியர் வகுப்பைச் சார்ந்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்துவருகிறோம்.
அப்பகுதியில் அவர்களுக்குப் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அரசு உதவிகள் ஏதும் கிடைக்காமல் இருந்துவருகிறோம். எனவே எங்களுக்கு குடியிருக்க இலவச வீட்டுமனை ஒதுக்கி வழங்கிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக்கொண்ட அலுவலர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.