ETV Bharat / state

8.4 கிலோ போலி தங்கம் மூலம் நகை மோசடி; கூட்டுறவு வங்கி நிர்வாக குழு கலைப்பு - நகை மோசடி

ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் 8.4 கிலோ தங்கம் போலியாக வைத்து நூதன முறையில் மோசடி செய்த சம்பவத்தில் நிர்வாக குழுவை முழுமையாக கலைத்து மாவட்ட கூட்டுறவு துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் 8.4 கிலோ தங்கம் போலியாக வைத்து நூதன முறையில் மோசடி

author img

By

Published : Jul 6, 2022, 5:05 PM IST

திருவண்ணாமலை: ஆரணி டவுன் தேவிகாபுரம் ஆரணி சாலையில் உள்ள ஆரணி கிளை கூட்டுறவு நகர வங்கி இயங்கி வருகின்றது. கடந்த 2021ம் ஆண்டில் வங்கியின் மேலாளராக ஆரணியை சேர்ந்த லிங்கப்பா, நகை மதிப்பீட்டாளராக மோகன் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில் 5 சவரன் தங்க நகை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தனர். இதனால் வங்கி மதிப்பீட்டாளர் மோகன் என்பவர் சுமார் 8.4 கிலோ தங்கம் போலியாக நகை வைத்து பணத்தை கையாடல் செய்துள்ளார்.

மேலும் கடந்த 27.10.21ல் செய்யாறு துணை பதிவாளர் கமலக்கண்ணன் சென்னையில் உள்ள வணிக குற்ற புலனாய்வு பிரிவில் அளித்த புகாரின் பேரில் அப்போதைய திருவண்ணாமலை இணை பதிவாளர் ராஜ்குமார், ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், கிளார்க் சரவணன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகிய 4 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் 8.4 கிலோ தங்கம் போலியாக வைத்து நூதன முறையில் ஊழியர்கள் மோசடி

மேலும் ஆரணி நகர வங்கியின் கூட்டுறவு நிர்வாக தலைவர், அதிமுகவை சேர்ந்த நகர செயலாளர் அசோக்குமார், துணை தலைவர் ஏ.ஜி.ஆனந்த், ஆகிய 2 பேரிடம் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு கடந்த 11.03.22 அன்று நகர கூட்டுறவு வங்கி மேலாளர் லிங்கப்பா மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட 4 பேரை வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து புதிய ஆரணி கூட்டுறவு வங்கி தலைவராக ஏ.ஜி.ஆனந்த் என்பவர் நியமிக்கபட்டார். இதனை தொடர்ந்து ஆரணி நகர கூட்டுறவு சங்கத்தில் கையாடல் மற்றும் ஊழல் செய்தது நிரூபணம் ஆனது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட இணை பதிவாளர் நடராஜன் தற்போது உள்ள கூட்டுறவு சங்க நிர்வாக குழுவை கலைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.