தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (ஏப்.6) நடைபெறவுள்ளது. அதையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்கு இயந்திரங்கள், கரோனா தடுப்பு உபகரணங்கள், வாக்குச்சாவடி பொருள்கள், வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று (ஏப்.5) நடைபெற்று வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 2 ஆயிரத்து 885 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருள்கள் அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஆட்சியர் சந்தீப் நந்தூரி மேற்பார்வையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 91 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக இந்த ஆண்டு கூடுதலாக 513 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் 170 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
அத்தகைய வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பட்டது- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்